என் இரு மகள்கள் மற்றும் தங்கை மகள் ஆகிய மூவருக்கும் காயல்பட்டினத்தில் ஹாஃபிழா பட்டமளிப்பு விழா; அனைவரும் வருக...! துஆ செய்க...!!
என் இரு மகள்கள் மற்றும் தங்கை மகள் ஆகிய மூவருக்கும் ஹாஃபிழா பட்டமளிப்பு விழா; அனைவரும் வருக...! துஆ செய்க...!!
எல்லாம் வல்ல அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் என் குடும்பத்தில் என் தங்கை மகள் உட்பட என்னுடைய மூன்று பெண் பிள்ளைகளும், என்னுடைய மகனாரும் திருக்குர்ஆன் முழுவதையும் மனனம் செய்து ஹாஃபிழ்களாக ஆகி உள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்...
இவர்களில் காயல்பட்டினம் முஅஸ்கருர் ரஹ்மான் பெண்கள் அரபிக் கல்லூரியில் திருக்குர்ஆனை நிறைவு என்னுடைய இரண்டு மகள்கள் க.அ. ஜைனப் ஜுவைரிய்யா, க.அ. ஹஃப்ஸா ருக்கையா மற்றும் எனது தங்கை மகள் ஜ. நஜ்மா பர்வீன் ஆகிய மூவருக்கும் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் ஞாயிறுக்கிழமை (01.09.2024) காயல்பட்டினத்தில் ஹாஃபிழா பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.
வாய்ப்புள்ள அனைவரும் நேரில் பங்கேற்றும், பிறர் தங்களின் துஆக்களிலும் பட்டம் பெறும் இந்தப் பிள்ளைகளுக்கும், இவர்களுடன் பட்டம் பெரும் சக பிள்ளைகளுக்கும், ஏற்கனவே பட்டம் பெற்ற எங்கள் குடும்பத்தின் அனைத்து பிள்ளைகளுக்கும் இம்மை, மறுமை வெற்றிக்கு துஆ செய்யுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
வெள்ளிக்கிழமை (30.08.2024) முதல் ஞாயிற்றுக்கிழமை (01.09.2024)வரை மூன்று நாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு பட்டமளிப்பு விழாவில் 110 பெண்களுக்கு முஅஸ்கரியா ஆலிமா பட்டமும், 56 பெண்களுக்கு ஹாஃபிழா பட்டமும் வழங்கப்படுகின்றன.
இவர்களில் 35க்கும் மேற்பட்டோர் அஃப்ழலுல் உலமா படிப்பையும், 40க்கும் மேற்பட்டோர் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளையும், 10க்கும் மேற்பட்டோர் பட்டயப் படிப்பையும் முடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விழா அழைப்பிதழ் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.
- கலீல் பாகவீ & குடும்பத்தினர், பரங்கிப்பேட்டை