اَلسَّـلاَمُ عَلَيْـكُمْ وَرَحْمَـةُ اللهِ وَبَـرَكَـاتُـهُ - அஸ்ஸலாமு அலை(க்)கும் வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு...

புதன், 29 ஏப்ரல், 2015

மீராப்பள்ளியில் தொடங்கியது நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்! (படங்கள்)

பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் திங்கள் கிழமை (27.04.2015) தொடங்கின. பதினொறாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் முதல் நாள் அன்று 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ-மாணவியர் கலந்து கொண்டனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.

இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து இப்பயிற்சி பயிலரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.  










படங்கள்:  ஜஃபர் அலீ மன்பயீ & ஷேக் ஆதம் மழாஹிரி

Seja o primeiro a comentar

  ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO