Powered by IP2Location.com United States of America நாட்டிலிருந்து வருகை தரும் தங்களை அன்புடன் வரவேற்கின்றோம்! اَلسَّـلاَمُ عَلَيْـكُمْ وَرَحْمَـةُ اللهِ وَبَـرَكَـاتُـهُ - அஸ்ஸலாமு அலை(க்)கும் வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு...

புதன், 20 மே, 2015

கோடைக்கால பயிற்சி முகாம் பரிசளிப்பு விழா

தொடர்ந்து பதினொறாவது ஆண்டாக பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் நடைபெறும் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கும், பல்வேறு போட்டிகளில் வென்றவர்களுக்கும் பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும், சிறார்களின் இஸ்லாமிய பல்சுவை நிகழ்ச்சியும் மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில் சிறப்பாக நடைபெற்றது. 

ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி நிர்வாகி கலிமா K. ஷேக் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் Dr. M.S. முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் கேப்டன் M. ஹமீத் அப்துல் காதர், மீராப்பள்ளி நிர்வாகிகள் I. இஸ்மாயில் மரைக்காயர், M.S அலி அக்பர், H.M.H. ஹனீஃபா ஆகியோர் முன்னிலை வகிக்க, தவ்லத் நிஸா அரபிக்கல்லூரி நிர்வாகி S.O சையத் ஆரிஃப் வாழ்த்துரை வழங்கினார்.

இவ்வருடமும் பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவையுடன் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி அன்வாருஸ் ஸுஃப்பா மக்தப் சென்டரும் இணைந்து ஏற்பாடு செய்திருந்ததனர். ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்வின் சில புகைப்படங்கள் தங்களின் பார்வைக்கு...








படங்கள்: ஷேக் ஆதம்

Seja o primeiro a comentar

  ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO