اَلسَّـلاَمُ عَلَيْـكُمْ وَرَحْمَـةُ اللهِ وَبَـرَكَـاتُـهُ - அஸ்ஸலாமு அலை(க்)கும் வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு...
Kuwait லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Kuwait லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 22 நவம்பர், 2010

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு ஏற்பாடு செய்த வரலாற்றுச் சுற்றுலா / Kuwait Tamil Islamic Committee (K-Tic) arranged "Trip to Failaka"

கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக குவைத் வாழ் தமிழ் மக்களுக்கு சமூகம், சமயம் என பல்வேறு தளங்களில் சீரிய சிந்தனையாளர்களின் ஆலோசனைகளாலும், சீர்மிகு ஆலிம் பெருமக்களின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் குவைத் இந்திய தூதரகத்திலும், குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் குவைத் மஸ்ஜிதுல் கபீர் நிர்வாகம் ஆகியவற்றில் பதிவு செய்யப்பட்டு நற்பணிகளாற்றும் சிறந்த பேரியக்கமான K-Tic (கே-டிக்) என்றழைக்கப்படும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம், முதன் முறையாக "ஃபைலக்கா" என்று அழைக்கப்படும் தீவு பகுதிக்கு தியாகத் திருநாள் விடுமுறையை முன்னிட்டு இஸ்லாமிய இன்ப வரலாற்றுச் சுற்றுலாவை 18.11.2010 வியாழக்கிழமை அன்று ஏற்பாடு செய்தது.ஃபைலக்கா என்பது போர்த்துகீசிய சொல். 'வெற்றி / ஈடேற்றம்' என்பது இதன் பொருள். இந்தத் தீவு குவைத் நாட்டிலிருந்து கடல் மார்க்கமாக 20 கி.மீ. தொலைவில் வட மேற்கு பகுதியில் அமைந்துள்ளது. சாதாரண கப்பலில் பயணம் செய்தால் ஒன்றரை மணி நேரத்திலும், விரைவு கப்பலில் சென்றால் ஒரு மணி நேரத்திலும் அத்தீவை சென்றடையலாம்.

இந்தத் தீவு, குவைத் நாட்டின் கடல் பகுதியில் ஃபாரசீக வளைகுடாவில் அமைந்துள்ள ஒன்பது தீவுகளில் இரண்டாவது மிகப் பெரியதும், மக்கள் வாழ்வதற்கு தகுதியும் உள்ள ஒரு தீவாகும். 12 கி.மீ. நீளமும், 6 கி.மீ. அகலமும் உடைய நிலப்பரப்பை கொண்டது. கடல் மட்டத்திலிருந்து 10 மீ உயரத்தில் உள்ளது. 3000 வருடங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்ட இத்தீவு பாரசீக வளைகுடா பகுதி வாணிபத்திற்கு முக்கிய கேந்திரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. பல வரலாற்று தகவல்களும், பழைய கால நாணயங்களும் அந்தப் பகுதியில் கிடைத்திருப்பதை ஆய்வாளர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர். அவற்றை இன்றும் குவைத் அருங்காட்சியத்தில் காண முடிகின்றது. சுமார் ஏழு கிராமங்களிலும், ஒரு நகரத்திலும் 1990ம் ஆண்டு வரை அங்கே மக்கள் வாழ்ந்திருக்கிறார்கள். 1985ம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் பிரகாரம் அத்தீவில் குவைத் மக்கள் 5832 நபர்களும், வேறு நாட்டைச் சார்ந்த மக்கள் 2426 நபர்களும் வசித்ததாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. 1990ம் ஆண்டு குவைத்தை ஈராக் கைப்பற்றியபோது அங்கு வாழ்ந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். அன்றிலிருந்து இன்று வரை அங்கே மக்கள் வசிப்பதில்லை. அத்தீவை பாரம்பரிய சின்னமாக அறிவித்து விட்டது குவைத் அரசு. குவைத் மக்களுக்கு அத்தீவில் சொத்துக்கள் இருந்தாலும் அங்கே யாரும் வசிப்பதில்லை. விடுமுறை தினங்களை பயன்படுத்துவதற்காக அங்கே சென்று வருகின்றனர். தொழுகைக்காக 5 பள்ளிவாசல்கள் அங்கே உள்ளன. பல தனியார் நிறுவனங்கள் தங்குமிடம், உணவகம், படகு குழுhம் உள்ளிட்ட சுற்றுலா வாசிகளுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். விரைவில் இத்தீவு உலக தரத்தில் சிறப்பு வாய்ந்த சுற்றுலா தளமாக அமையக்கூடும் என சில செய்தி வலைப்பதிவுகள் தகவல்களை வெளியிட்டுள்ளன. வாழ்வாதாரம் தேடி வந்த நாட்டின் வரலாற்றுச் சுவடுகளை காண்பது நமது சிந்தனைக்கு நல்ல விருந்தளிக்கும் செயல் என்பதை உணர்ந்து நமது சங்கத்தை சேர்ந்த உறுப்பினர்கள் இந்த சுற்றுலாவுக்கு ஆர்வமாக தங்களின் பெயர்களை பதிவு செய்தனர். சுமார் 12 குடும்பங்கள், சிறார்கள் உட்பட 60 உறுப்பினர்கள் இந்த சுற்றுலாவில் பங்கேற்றனர். காலை 9 மணிக்கு சங்கத்தின் தலைவர் மவ்லவீ எம்.எஸ். முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவீ மற்றும் மீடியா குழு செயலாளர் அல்ஹாஜ் ஏ. அப்துல் கஃபூர் ஆகியோர் வழியனுப்பி வைக்க குவைத், ஸால்மியா பகுதியில் அமைந்துள்ள துறைமுகத்திலிருந்து சுற்றுலாக் குழுவினர் கப்பலில் புறப்பட்டனர். பயண ஒழுக்கம், பிரார்த்தனை (துஆ), தலைமைக்கு கட்டுப்படுதல், வரலாற்று அத்தாட்சிகளினால் ஏற்பட வேண்டிய சிந்தனை மாற்றங்கள் போன்ற அறிவுரைகளுடனும், மிதமான வெப்பம், ரம்மியமான காற்று என பல்வேறு மகிழ்ச்சியான தருணங்களுடனும் புறப்பட்ட கப்பல் நண்பகல் 11 மணியளவில் ஃபைலக்கா தீவை சென்றடைந்தது. தனி ஏற்பாட்டில் தீவை சுற்றிப்பார்க்க வந்திருந்த சில தமிழ் முஸ்லிம் குடும்பங்களும், சகோதரர்களும் நம்முடன் இணைந்து கொண்டது சங்கத்தினருக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது. இயன்றளவு தீவை சுற்றிப்பார்த்து விட்டு இடையில் நண்பகல் தொழுகையான லுஹர் தொழுகையையும், மாலை தொழுகையான அஸர் தொழுகையையும் அந்தந்த நேரங்களில் நிறைவேற்றினர். அவரவர்களும் கொண்டு வந்திருந்த உணவுகளை பகிர்ந்து சாப்பிட்டு விட்டு, குழந்தைகள் மகிழ்ச்சியாக விளையாடிய நிகழ்வுகளை ஆனந்தமாக அனுபவித்தனர். அனைவரும் தங்களின் எண்ணங்களை பகிர்ந்து கொண்டதுடன் அந்தி மாலைத் தொழுகையான மக்ரிப் தொழுகையை முடித்து விட்டு மாலை 5:30 மணிக்கு ஃபைலக்கா துறைமுகம் வந்து குவைத் செல்லும் கப்பலுக்காக காத்திருந்த வேளையில் குவைத் நாட்டைச் சார்ந்த சில இளைஞர்கள் துறைமுகத்தில் கூடியிருந்து மக்களை மகிழ்விப்பதற்காக உடல் சார்ந்த திறன்களை வெளிப்படுத்தி காட்டி மகிழ்ச்சியில் ஆழ்த்தினர். ஃபைலாக்காவில் புறப்பட்ட கப்பல் இரவு 8 மணிக்கு ஸால்மியா துறைமுகம் வந்தடைந்தது. இடைப்பட்ட பயண நேரத்தில் கப்பலின் உள்ளேயே பல்வேறு தலைப்புகளில் கருத்துக் பரிமாற்றங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் நடைபெற்றன. இதுபோன்ற வரலாற்று இடங்களை மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் என்றும், அதற்கு சங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அனைவரும் மகிழ்ச்சியுடன் அவரவர் இல்லம் திரும்பினர். அல்ஹம்துலில்லாஹ். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் இந்த சுற்றுலாவை தலைமையேற்று வழிநடத்தி சென்றார். இஸ்லாமியப் பொது அறிவுப் போட்டி நடத்தும் பொறுப்பை இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் ஏற்று நடத்தினார். பொருளாளர் அல்ஹாஜ் எம். ஜாஹிர் ஹுஸைன் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டார். பொதுச் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ எம்.ஏ., வழிகாட்டியாக செயல்பட்டார். சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கு சங்கத்தின் துரித சேவை அலைபேசி எண் (+965) 97872482 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறும், மேலதிக செய்திகளுக்கும், சங்கத்தின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும் சங்கத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.k-tic.com என்ற இணையதளத்தை பார்வையிடுமாறும், தங்களின் மேலான கருத்துக்கள், ஆலோசனைகளை q8tic@yahoo.com/ ktic.kuwait@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளுக்கு அனுப்பி வைக்குமாறும், உடனுக்குடன் தகவல்கள் தங்களின் மின்னஞ்சல்களுக்கு வந்து சேர http://groups.yahoo.com/group/K-Tic-group என்ற யாஹு குழுமத்தின் தங்களை இணைத்துக்கொள்ளுமாறும் சங்க செய்திக்குறிப்பு தெரிவிக்கின்றது.

நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர். -------------------------------------------------

Kuwait Tamil Islamic Committee (K-Tic) carried out its picnic for its members and their families on Thursday 18th November 2010.

It is a maiden picnic for K-Tic and its of its first kind to visit “Failaka Island”. The day started with fun-filled voyage on the ferry at 9:00AM from Salmiya (Ras Al Ard).

Moulavee Ash-Shaikh M.S. Mohammed Meera Shah Fazil Baqaavee (President) and Al-Haaj A. Abdul Gafoor (Secretary, Media Wing) attended to give a send-off for the trip to Failaka. About 12 families and some bachelors explored Failaka.

The cruise was entertaining, kids and children enjoyed it. The weather was very pleasant and reached the port of Failaka around 11AM.

Failaka - Out of an archipelago of nine islands, Failaka is Kuwait 's only inhabited one. It is located 20 kilometers off Kuwait City 's coast. Failaka is a bastion of Kuwait 's rich heritage. Several historic and archaeological sites can be found at different locations. In the 3rd century BC, the Greeks referred to the island as Icaria . This was when Alexander the Great conquered the region. Traces of Greek mythology amalgamated with the local culture. Historical records show that the island was populated during the seventh and eighth century AD.

The beach and zoo were also other spots were the families enjoyed. The amiable weather passed by walking around the island and having awareness with Islamic Quiz program. The waiting time at the Failaka port was filled with the amazing gymnastic art of talented intrepid group of youngsters.

This historical trip to Failaka island evoked the people lived in those days, the changes that happened during yesteryears. The pleasant trip arrived back at Salmiya at about 8PM with evening sea breezes.

For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group.

செவ்வாய், 21 செப்டம்பர், 2010

K-Tic ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் & கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' / K-Tic Conducted 'Educational Awareness Camp & Exchanges of Thoughts

குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்'

குவைத்தில் செயற்படும் இந்திய கல்வி நிலையங்கள் / பள்ளிக்கூடங்களின் புது கல்வியாண்டின் தொடக்கமாகவும், குவைத் மண்ணில் வாழும் நம் சகோதரர்களின் கல்வித் தாகத்தை தீர்ப்பதற்காகவும், இந்திய இஸ்லாமியர்களின் கல்வி நிலை குறித்த உண்மைத் தகவல்கள், எதிர்கால உள்நாடு / வெளிநாடு கல்வி பற்றிய ஓர் அலசல், என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? எப்படி படிக்கலாம்? எப்போது படிக்கலாம்? ஆகியவற்றின் விரிவான விளக்கங்கள், கல்வி உதவித் தொகை குறித்த ம(றை)றக்கப்பட்ட உண்மைகள் போன்றவற்றை குறித்து மேலதிக விபரங்களை அறிந்து கொள்வதற்கும், அனைவரும் தெரிந்து கொள்வதற்கும், கல்வி குறித்த கருத்துக்களை பரிமாறிக் கொள்வதற்கும், சந்தேகங்களில் தெளிவு பெறுவதற்கும் குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic) ஏற்பாடு செய்த 'கல்வி விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்து பரிமாற்ற நிகழ்வுகள்' கீழ்க்கண்ட முறையில் இரண்டு நாட்கள் தொடர்ச்சியாக குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் மஸ்ஜிதுல் கபீரின் நிர்வாகம் ஆகியற்றின் ஆதரவில் நடைபெற்றன. அல்ஹம்து லில்லாஹ்...

முதல் நாள் நிகழ்ச்சி:

16.09.2010 வியாழக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து இரவு 10:00 மணி வரை குவைத் ஃபஹாஹீல் பகுதியில் உள்ள 'மஜீத் அல் ஹிலால் அல் உதைபீ (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது.
சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும், சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., அவர்களும் சிறப்புரையாற்றினர். சங்கத்தின் மார்க்க அறிஞர்கள் (ஜமாஅத்துல் உலமா) குழு உறுப்பினர் மவ்லவீ காரீ எச்.எம். அப்துர் ரஹ்மான் மழாஹிரி அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
இரண்டாம் நாள் நிகழ்ச்சி:

17.09.2010 வெள்ளிக்கிழமை இரவு 7:30 மணி முதல் இஷா தொழுகையை தொடர்ந்து 10:00 மணி வரை குவைத் சிட்டி, மிர்காப் பகுதியில் உள்ள 'அல்-ஷாயா மஸ்ஜித் (உர்தூ குத்பா)' பள்ளிவாசலில் நடைபெற்றது. சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் எம். முஹம்மது நிஜாமுத்தீன் பாகவீ தலைமையில் நடைபெற்ற இச்சிறப்புமிகு நிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த கல்விக் குழு உறுப்பினரும், குவைத் யுனிவர்ஸல் அமெரிக்கன் கலாசாலையின் கல்வியியல் ஆலோசகரும், குவைத் ஏர்வேஸ் நிறுவனத்தின் விமான ஓட்டி (பைலட்) பயிற்சியாளரும், சிறந்த மனோதத்துவ அறிஞருமான பேராசிரியர் எம். அப்துர் ரஹீம் M.A., M.Ed., QTIC, அவர்களும், சங்கத்தின் கல்விக் குழு செயலாளரும், திருநெல்வேலி ஷஃபி கல்வி அறக்கட்டளையின் தாளாளரும், குவைத் ஜலீப் இண்டிகிரேடட் இந்தியன் பள்ளியின் இணைப் பேராசிரியரும், சிறந்த கல்வியியல் ஆய்வாளருமான முனைவர் பேராசிரியர் எம். அப்துல் ஹமீத் M.Sc., M.Phil, B.Ed., PhD., அவர்களும் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் துணைத் தலைவர் மவ்லவீ ஹாபிஃழ் காரீ அல்ஹாஜ் ஏ.ஆர். முஹம்மது இப்ராஹீம் மன்பயீ அவர்களின் துஆவுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. இரண்டு நிகழ்ச்சிகளிலும் பெண்கள் உட்பட ஏறக்குறைய 150 சகோதர, சகோதரிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். கல்வி குறித்து எழுப்பிய அனைத்து சந்தேகங்களுக்கும் விளக்கமாக பதில் அளிக்கப்பட்டன. கல்வி குறித்த தகவல்களும் பார்வையாளர்களால் பரிமாறி கொள்ளப்பட்டன. அனைவருக்கும் தேநீர் வசதியும், பெண்களுக்கு தனியிட வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இச்சிறப்புமிகு நிகழ்ச்சிகளில் சங்கத்தின் பொதுச் செயலாளர் மவ்லவீ அஃப்ழலுல் உலமா அல்ஹாஜ் அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதுடன் சங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்தும் சிறப்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொதுச் செயலாளர் அல்ஹாஜ் ஏ.கே.எஸ். அப்துல் நாஸர் வரவேற்புரையாற்றினார். சங்கத்தின் இணைப் பொருளாளர் அல்ஹாஜ் எச். முஹம்மது நாஸர் நன்றியுரையாற்றினார்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சிகளில் குவைத் அவ்காஃப் / இஸ்லாமிய விவகாரங்கள் துறை அமைச்சகம் மற்றும் திருக்குர்ஆன் விவகாரங்கள் துறை நிர்வாகம் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் சங்கம் ஏற்பாடு செய்திருக்கும் இலவச திருக்குர்ஆன் பயிற்சி வகுப்புகள் குறித்த தகவல்கள் அறிவிப்பு செய்யப்பட்டது. விண்ணப்பப் படிவங்களும் விநியோகம் செய்யப்பட்டன.

மேலதிக விபரங்களுக்கு... துரித சேவை அலைபேசி எண் : (+965) 97 87 24 82 அதிகாரப்பூர்வ இணையதளம் : www.k-tic.com மின்னஞ்சல் முகவரிகள் : q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com யாஹு குழமம் : http://groups.yahoo.com/group/K-Tic-group

செய்தி : தகவல் தொடர்பு பிரிவு, குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம்

இதை படித்துக் கொண்டிருக்கும் குவைத்திற்கு வெளியே வாழும் அன்பர்கள்... குவைத்தில் வாழும் தங்களைச் சார்ந்தோருக்கும், அறிந்தோருக்கும் இச்செய்தியை எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வில் பங்கெடுக்க வைக்குமாறும், நற்பணிகளில் சேர்ந்து செயலாற்ற வைக்குமாறும் சங்க நிர்வாகிகள் அன்பு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

“Kuwait Tamil Islamic Committee (K-Tic)” Conducted 2 Day Programs on "Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" in Tamil

Kuwait Tamil Islamic Committee (K-Tic), a non-profit socio welfare organization of Tamil speaking Muslim community in Kuwait, (established in 2006 - registered with Indian Embassy of Kuwait and also with Administration of Grand Mosque, Kuwait Ministry of Awqaf and Islamic Affairs).

K-Tic has a impressive name among the socio-welfare organizations in Kuwait and Gulf countries whose benevolent works and enlightening activities and conserving Islamic uniqueness and also well known with the thousands of Indians especially all Tamil speaking people in Kuwait .

K-Tic arranged two outstanding programs on "Educational Awareness Camp" and "Exchanges of Thoughts" in Tamil Language for Tamil Community

The first program was on September 16, 2010 Thursday @ 7:30pm after Ishaa Prayer at Fahaheel - Masjid Majeed Al Hilal Al Othaibee.

Prof. Dr. M. Abdul Hameed M.Sc., M.Phil, B.Ed., PhD., (Secretary, Education Wing, K-Tic / Senior Teacher and Administrative Officer, Indian Integrated School, Jaleeb, Kuwait / Trustee, Shafi Educational Trust, Thirunelveli, Tamilnadu, S.India and Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary) gave valuable lecture on education. The program was presided over by Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Vice President) and The Dua made by Moulavee Qaari Ash-Shaikh H.M. Abdur Rahman Mazhahiri (Member, Scholars (Jama'athul Ulamaa) Wing). The second program was on September 17, 2010 Friday @ 7:30pm after Ishaa Prayer at Kuwait City - Masjid Al Shaaya, Near Mirqab KPTC Bus Terminal. Prof. A. Abdur Raheem M.A., M.Ed., QTIC, (Senior Member, Education Wing, K-Tic / Advisor, Kuwait Universal American School, Hawally, Kuwait / Pilot Instructor, Kuwait Airways, Kuwait) and Prof. Dr. M. Abdul Hameed M.Sc., M.Phil, B.Ed., PhD., (Secretary, Education Wing, K-Tic / Senior Teacher and Administrative Officer, Indian Integrated School, Jaleeb, Kuwait / Trustee, Shafi Educational Trust, Thirunelveli, Tamilnadu, S.India) presented the highlights and importance of education. The program was presided over by Moulavee Al-Hafiz Qari Al-Haaj Ash-Shaikh M. Muhammed Nizamudheen Baaqavee (Vice President, K-Tic) and The Dua made by Moulavee Haafiz Qaari Ash-Shaikh A.R. Mohamamed Ibraheem Manbayi (Vice President).

Both the conference was anchored, convened, inaugurated & listed by Moulavee Afzalul Ulamaa Ash-Shaikh A.B. Khaleel Ahmed Baaqavee M.A., (General Secretary), welcome address by Al-Haaj A.K.S. Abdul Nazar (Dy. Gen. Secretary) and vote of thanks by Al Haj H. Mohammed Nasar (Dy. Treasurer).

Before concluding the programs at 9.30pm., a questionnaire section was conducted. All speakers replied on questions and doubts on Education, Job and scholarship position / situation in Tamilnadu and India . The spectators requested K-Tic to carryout more such camps which will be very useful for the community. Separate seating was arranged for ladies and tea was served at the both programs.

Further, information & forms were presented for the Free Al-Quran Classes arranged in co-ordination with Kuwait Ministry of Awqaf & Islamic Affairs.

For more details please contact to K-Tic's Hotline (+965) 97872482, for more Tamil and English News and Event Photos… please visit our official website: www.k-tic.com, for sending your valuables suggestions please mail to: q8tic@yahoo.com / ktic.kuwait@gmail.com, for joining the Yahoo Group: http://groups.yahoo.com/group/K-Tic-group.

  ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO