اَلسَّـلاَمُ عَلَيْـكُمْ وَرَحْمَـةُ اللهِ وَبَـرَكَـاتُـهُ - அஸ்ஸலாமு அலை(க்)கும் வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு...

புதன், 9 ஜூன், 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் முப்பெரும் விழா!

ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி!! மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்!!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இந்த மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்....

12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

பிற்பகல் 1:30 மணி முதல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் போட்டிகளில் பங்குபெறும மாணவச் செல்வங்களின் திறமைகளை நேரில் காணவும், ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு துஆ செய்யவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு:

முதல்வர், அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி, ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி, மீராப்பள்ளித் தெரு, பரங்கிப்பேட்டை - 608502, கடலூர் மாவட்டம். தொலைபேசி: (04144) 25 33 11

Seja o primeiro a comentar

  ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO