اَلسَّـلاَمُ عَلَيْـكُمْ وَرَحْمَـةُ اللهِ وَبَـرَكَـاتُـهُ - அஸ்ஸலாமு அலை(க்)கும் வ ரஹ்ம(த்)துல்லாஹி வ பரகா(த்)துஹு...
பரங்கிப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பரங்கிப்பேட்டை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

செவ்வாய், 10 மே, 2011

தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உதவிடுவீர்!

அன்பிற்கினிய சகோதர சகோதரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...
நம் அனைவரின் மீதும் ஏக இறைவனின் அமைதி நிலவட்டுமாக!
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை, வாத்தியாப் பள்ளித் தெரு, எண் 1, ஃபாத்திமா நகர் முகவரியில் வசிக்கும் திருமதி ஏ.கே. மைமூன் பீவி அவர்களின் கீற்று வேயப்பட்ட வீட்டில் கடந்த ஞாயிற்றுக் கிழமை (08.05.2011) நண்பகல் 1:30 மணியளவில் சமையல் செய்து கொண்டிருக்கும்போது திடீரென்று தீப்பிடித்து மளமளவென்று வீடு முழுவதும் பரவியது.
வெறும் சுவர்கள் மற்றும் மண் பாத்திரங்கள் போன்றவற்றை மட்டும் விட்டுவிட்டு வீட்டில் உள்ள பீரோக்கள், அலமாரிகள், கட்டில், மெத்தை, தொலைக்காட்சி பெட்டி, எமர்ஜென்சி விளக்கு, மின்விசிறிகள், டேபிள் ஃபேன், ரேடியோ, கிரைண்டர், மிக்ஸி, கதவுகள், ஜன்னல்கள், சுவிட்சு பெட்டிகள், எலெக்ட்ரானிக் மீட்டர், சைக்கிள், டேபிள், நாற்காலிகள், துணிமணிகள், உணவுப் பொருட்கள், கூரை, கீற்று, மூங்கில்கள் என அனைத்தையும் ஒரு சில நிமிடங்களில் தீ தின்று தீர்த்து விட்டது.
இத்துடன் வீட்டை சரி செய்வதற்காக கடனாக வாங்கி வைத்திருந்த 55,000 ரூபாய் ரொக்கப் பணம், பொருட்கள் வாங்கிக் கொடுப்பதற்காக வைத்திருந்த நான்கு ரேஷன் (குடும்ப) அட்டைகள், குழந்தைகளின் காது நகைகள் (சுமார் 1 பவுன்)என அனைத்தையும் நெருப்பு தின்று விட்டது.
சிறுகச் சிறுகச் சேமித்து குடும்பத் தேவைக்காக வைத்திருந்த இந்தப் பொருட்களின் மதிப்பு ஏறக்குறை 5 இலட்சத்திற்கும் அதிகம். இதற்கெல்லாம் மேலாக வீட்டில் உள்ளோர் உடுத்தியிருந்த துணிகள் மட்டுமே மிஞ்சியது. மாற்றுத் துணிகள் ஒன்றுகூட இல்லாமல் அனைத்தும் தீயில் கருகிவிட்டது.
கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தும் ஒரு மகனார், அவரின் மனைவி, இரண்டு சிறு பிள்ளைகள் (ஒரு பெண் பிள்ளை வயது 5 மற்றும் ஒரு ஆண் பிள்ளை வயது 4), ஒரு விதவை மகள் (வயது 40) என ஆறு நபர்களின் உயிர்கள் மட்டுமே இந்த சம்பவத்தில் தப்பித்தவை.
அனைத்தையும் இழந்து நிற்கும் அந்த ஏழைக் குடும்பத்திற்கு உறவினர்கள், ஊர்க்காரர்கள் உட்பட பலர் பல விதங்களில் ஆறுதல் சொல்லி தேற்றினாலும் நாளைய வாழ்விற்கு வழித் தெரியாமல் கலங்கி நிற்கிறது அந்த குடும்பம்.
எனவே, இந்தத் தகவலை வேண்டுகோளாக ஏற்று உள்நாட்டிலும், வெளிவாட்டிலும் வாழும் நல்லுள்ளம் கொண்ட சகோதர, சகோதரிகள், அமைப்புகள், இயக்கங்கள், அறக்கட்டளைகள், நற்பணி மன்றங்கள், சங்கங்கள் அனைவரும் தங்களால் இயன்றளவு பொருளாகவோ, பணமாகவோ அன்பளிப்பாக வழங்கி அந்த ஏழைக் குடும்பத்தின் கண்ணிரை துடைத்திடுமாறும், குடியிருக்க வீடும், குடும்பம் நடத்தத் தேவையான பொருட்களும், உடுத்திக் கொள்ள துணிமணிகளும் வழங்கி அவர்கள் வாழ வழி செய்திடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
உதவி செய்ய விரும்புவோர் கீழ்க்காணும் முகவரியில் நேரிடையாகவோ அல்லது தொலைபேசி மற்றும் அஞ்சல் வாயிலாகவோ தொடர்பு கொள்ளுமாறும், இந்தக் குடும்பத்தின் செய்தியை பிறருக்கும் எடுத்துரைத்து அவர்களும் இந்த நற்காரியத்தில் பங்கெடுக்க வைக்குமாறும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்.
எல்லாம் வல்ல ஏக இறைவன் நம் அனைவருக்கும் நேர்வழி காட்ட போதுமானவன்.
நன்றி. வஸ்ஸலாம்.
திருமதி ஏ.கே. மைமூன் பீவி எண் 1, ஃபாத்திமா நகர், வாத்தியாப் பள்ளித் தெரு, பரங்கிப்பேட்டை - 608502, கடலூர் மாவட்டம். அலைபேசி:(+91) 9894342457 வங்கிக் கணக்கு விபரம்: A/c # : 007101000018803 Bank: Indian Overseas Bank Branch: Portonovo - 0071 District: Cuddalore மேலதிக விபரங்களுக்கு... ஏ.கே. அப்துல் பாரீ (அண்ணன்)-(+91) 9003608064 எஸ். அப்துல் ஹமீத் (மச்சான்)-(+91) 9944030796 ஏ.கே. முஹம்மது இப்ராஹீம் (மகன்)- (+91) 8870159878 ஏ. லியாகத் அலீ (தங்கை மகன்)-(+91) 9597783844 அன்புடன், மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A., பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic). (தற்போது பரங்கிப்பேட்டையில் நிகழ்விடத்திலிருந்து...) Mobile:(+965) 97872482 / 66641434 (Kuwait)/(+91) 9994106594(India) www.k-tic.com / www.mypno.com www.ulamaa-pno.blogspot.com http://www.facebook.com/khaleelbaaqavee --------------------------------------------------- செய்தி உதவி: பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம் - www.mypno.blogspot.com படங்கள் உதவி: சகோ. இஸ்மாயீல் - www.ismailpno.blogspot.com

புதன், 23 பிப்ரவரி, 2011

பரங்கிப்பேட்டையில் மார்க்கக் கல்வி பயிலும் பெண்களுக்கு உதவித் தொகை

தகவல் உதவி: ஜமாஅத் குழுமம்

வியாழன், 17 ஜூன், 2010

குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் 5ஆம் ஆண்டு துவக்க விழா! புதிய நிர்வாகிகள் தேர்வு!!

கடந்த 11.06.2010 வெள்ளிக்கிழமை மாலை 3:00 மணியளவில் குவைத், ஸால்மியா பகுதியில் உள்ள பேரவையின் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஜனாப் B.A அப்துர் ரஜ்ஜாக் அவர்களின் இல்லத்தில் குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவையின் '5ஆம் ஆண்டு துவக்க விழா'வும், '2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்வு'ம் நடைபெற்றன. அல்ஹம்துலில்லாஹ்...

பேரவையின் ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் S. முஹம்மது நூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பேரவையின் தலைவர் ஜனாப் J. ஹஸன் அலீ மற்றும் செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆகியோர் முன்னிலை வகிக்க, ஆலோசனை குழு உறுப்பினர் ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் இறைவசனங்கள் (கிராஅத்) ஓத நிகழ்ச்சிகள் இனிதே துவங்கின.

தலைவரின் தலைமையுரைக்கு பின், செயலாளர் மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ ஆண்டறிக்கையை சமர்ப்பித்தார். துணைச்செயலாளர் ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால் பேரவையின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து விளக்கினார். பொருளாளர் ஹாஜி M.S குலாம் ஜெய்லானி மியான் ஆண்டு வரவு செலவு கணக்குகளை தாக்கல் செய்தார்.

4ஆம் ஆண்டு நிறைவு மற்றும் 5ம் ஆண்டு துவக்கம் குறித்து உறுப்பினர்களின் கலந்துரையாடலுக்கு பிறகு 2010-2011ம் ஆண்டிற்கான புதிய நிர்வாகிகள் தேர்தல் நடைபெற்றது. கீழ்க்காணும் சகோதரர்கள் பேரவையின் புதிய நிர்வாகிகளாக ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.

நிர்வாகக் குழு

தலைவர் :ஹாஜி M.S. குலாம் ஜெய்லானி மியான்

கௌரவ தலைவர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ துணைத் தலைவர்கள் : 1. ஜனாப் S. முஹம்மது நூர் 2. ஜனாப் K. முஹம்மது இப்ராஹீம் (ஃபதஹ் நானா)

செயலாளர்: ஜனாப் மீ.மெ. ஹாஜா கமால்

இணைச்செயலாளர் : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப் துணைச்செயலாளர்கள் : ஜனாப் U. நிஸார் அஹ்மது 2. ஜனாப் S. ஸலாஹுத்தீன்

பொருளாளர் : ஜனாப் S. கவுஸ் அலீ

துணைப் பொருளாளர் : ஜனாப் B.A. அப்துர் ரஜ்ஜாக்

ஊடகத்துறை பொறுப்பாளர் : மவ்லவீ அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ

மக்கள் தொடர்பு : ஜனாப் N. ஸுல்தான் ஆரிஃப்
ஆலோசனைக் குழு

தலைவர் : ஜனாப் J. ஹஸன் அலீ

உறுப்பினர்கள்: 1. ஜனாப் Z. ஹபீபுல்லாஹ் மரைக்காயர் 2. ஜனாப் B. முஹம்மது ஷரீஃப் 3. ஜனாப் A.B. அப்துல் நஜீர் 4. ஜனாப் M.H. அல்காஃப் ஹுஸைன் 5. ஜனாப் K. ஜாகிர் ஹுஸைன்

செயற்குழு

தலைவர் : ஜனாப் N. வஜ்ஹுத்தீன்
உறுப்பினர்கள் : 1. ஜனாப் S. இமாம் கஜ்ஜாலி 2. ஜனாப் M.H. உஜைர் 3. ஜனாப் I. முஸ்தஃபா 4. ஜனாப் S. ஷர்ஃபுத்தீன் 5. ஜனாப் S.A. பீர் முஹம்மது
புதிய பொருளாளர் ஜனாப் S. கவுஸ் அலீ நன்றியுரையாற்ற, கௌரவ தலைவரின் துஆவுடன் நிகழ்வுகள் இனிதே நிறைவுற்றன. இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பெரும்பாலானோர் கலந்துகொண்டு தங்கள் வருகையை பதிவுசெய்து சிறப்பித்ததுடன் நகர வளர்ச்சிக்கும், மக்களின் முன்னேற்றத்திற்கும் பேரவை எடுக்கும் முயற்சிகளுக்குஉதவியும் ஒத்துழைப்பும் வழங்குவதாக உறுதியளித்தனர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை(KPIA)யின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.

மேலதிக செய்திகளுக்கும், பேரவையின் செயற்பாடுகள் குறித்து அறிந்து கொள்வதற்கும், தங்களின் கருத்துக்கள், ஆலோசனைகளை அனுப்புவதற்கும் kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிகளை பயன்படுத்திக்கொள்ளுமாறும், குவைத் வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்கள் பேரவையின் குழுமத்தில் இணைந்திடுமாறும் பேரவையின் செய்திக் குறிப்பு தெரிவிக்கின்றது. நன்றி. வஸ்ஸலாம்.

செய்தி : ஊடகத் துறை, குவைத் பரங்கிப்பேட்டை இஸ்லாமியப் பேரவை (KPIA), குவைத்

அலைபேசி எண்கள்:(+965) 66 36 26 47 / 97 87 24 82 / 66 64 14 34 / 67 78 97 84 மின்னஞ்சல்கள் : kwt_pno_islam@yahoo.co.in / kwt.pno.islam@gmail.com குழுமம் : http://groups.google.com/group/kpia
KPIA பேரவையின் செயற்திட்டங்கள்

அ) பரங்கிப்பேட்டைக்கான சேவைகள்:

1. கல்வி உதவி (உயர் கல்வி மற்றும் கம்ப்யூட்டர் கல்வி)!

2. கத்னா (சுன்னத்) செய்ய உதவி! 3. ஜனாஸா அடக்கம் செய்ய உதவி! 4. ஆதவற்ற குடும்பங்களுக்கு வருமானத்தை ஏற்படுத்தும் முறையில் தொழில் தொடங்க உதவி! 5. வருமானமில்லா பள்ளிவாசல்களில் ரமழான் நோன்பு கஞ்சி காய்ச்ச உதவி! 6. ஜகாத் (ஏழைவரி), ஸதகத்துல் ஃபித்ர் (பெருநாள் தர்மம்) மற்றும் ஸதகா (தர்மம்) போன்றவற்றை இங்கு வசூலித்து ஊரிலுள்ள தகுதியுள்ளோருக்கு விநியோகித்தல்! 7. இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இயன்றவரை உதவி செய்தல்! 8. மற்ற வளைகுடா நாடுகளில் இயங்கிவரும் நமதூர் அமைப்புகளுடன் இணைந்து வேலையில்லாத நமதூர் சகோதரர்களுக்கு வேலை பெற்று தர ஏற்பாடு செய்தல்! 9. நமதூரில் செயல்பட்டு கொண்டிருக்கும் நற்பணி அமைப்புகளுடன் இணைந்து இலவச மருத்துவ முகாம், கல்வி விழிப்புணர்வு முகாம், இலவச தண்ணீர் பந்தல், பேரூந்து & தொடர்வண்டி (இரயில்) கால அட்டவணை தகவல் பலகை, சாலையோரம் மரங்கள் நடுதல், கோடைகால பயிற்சி வகுப்பு, இலவச கம்ப்யூட்டர் கல்வி, அரசு நலத்திட்டங்கள் மற்றும் உதவி தொகைகள் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் நமதூருக்குத் தேவையான அவசியமான அத்தியாவசியமான பணிகள் குறித்த கலந்தாய்வு போன்றவற்றை ஏற்பாடு செய்தல்!
ஆ) குவைத்திற்கான சேவைகள்:

1. உறுப்பினர்களுக்கு அடையாள அட்டை வழங்குவது!

2. ஊரிலிருந்து வரும் தபால்களை ஒப்படைப்பதற்கான உள்ளூர் தபால் சேவை! 3. ஆண்டுக்கொருமுறை பேரவை சார்பாக குவைத்திலிருந்து புனித உம்ரா பயணம் புறப்படுதல்! 4. உறுப்பினர்களுக்கு வட்டியில்லா கடன் திட்டம் ஏற்பாடு செய்தல்! 5. நமதூர் மக்களுக்கான பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடத்துதல்!

இன்னும் உண்டு பல நல்ல செயற்திட்டங்கள்...!

இன்ஷா அல்லாஹ்... அவற்றை செயல்படுத்த வேண்டும்..!! தங்களின் மேலான பிரார்த்தனைகள், உதவிகள் மற்றும் ஒத்துழைப்புகள்...!!!

புதன், 9 ஜூன், 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் முப்பெரும் விழா!

ஹாஃபிழ் பட்டமளிப்பு விழா! தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி!! மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்!!!

பேரன்புடையீர்! அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்ம...

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இந்த மாதம் 12 மற்றும் 13 தேதிகளில் முப்பெரும் விழா நடைபெற இருக்கின்றது இன்ஷா அல்லாஹ்....

12ந் தேதி சனிக்கிழமையன்று தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி காலை 9.00 மணி முதல் இஷா வரை நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் லுஹர் வரை உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் முதல் முறையாக நடைபெற இருக்கின்றது.

பிற்பகல் 1:30 மணி முதல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் திருக்குர்ஆனை முறையாக முழுவதுமாக மனனம் செய்து தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஹாஃபிழ் பட்டம் வழங்கும் நிகழ்ச்சியும், அதைத் தொடர்ந்து கிராஅத் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சியும் நடைபெறும்.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள அழைப்பிதழில் பெற்றுக் கொள்ளலாம்.

அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் போட்டிகளில் பங்குபெறும மாணவச் செல்வங்களின் திறமைகளை நேரில் காணவும், ஹாஃபிழ் பட்டம் பெறும் மாணவர்களுக்கு துஆ செய்யவும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

தொடர்புக்கு:

முதல்வர், அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி, ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி, மீராப்பள்ளித் தெரு, பரங்கிப்பேட்டை - 608502, கடலூர் மாவட்டம். தொலைபேசி: (04144) 25 33 11

வியாழன், 20 மே, 2010

பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி & மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக பரங்கிப்பேட்டை மாநகரில் தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி மற்றும் மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம்
கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தமிழகம் தழுவிய மாபெரும் கிராஅத் போட்டி பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி வளாகத்தில் அமைந்திருக்கம் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரியில் இன்ஷா அல்லாஹ் வருகின்ற ஜூன் மாதம் 12 ந் தேதி (12.06.2010) சனிக்கிழமை அன்று காலை 9.00 மணி முதல் நடைபெற இருக்கின்றது.

இப்போட்டியில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களைச் சேர்ந்த அரபுக்கல்லூரிகள் மற்றும் ஹிஃப்ழு மதரஸாக்களில் கல்வி பயிலும் மாணவர்கள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை நிரூபிக்க இருக்கின்றனர்.

இரண்டாம் நாள் 13 ந் தேதி (13.06.2010) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 9.00 மணி உலக அளவிலும், அகில இந்திய அளவிலும் நடத்தப்பட்ட கிராஅத் போட்டிகளில் பல பரிசுகளை வென்ற தலை சிறந்த காரீகளின் (காரீ: முறையாக திருக்குர்ஆனை ஓதக்கூடியவர்) மாபெரும் அகில இந்திய கிராஅத் அரங்கம் நடைபெற இருக்கின்றது.

மேலதிக விபரங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள விளம்பரத்தில் உள்ளன.

அல்லாஹ்வின் அருள்மறையை, அவனிக்கு வழிகாட்ட வந்த திருமறையை தேனினும் இனிய குரல்களில், உள்ளங்கள் உருகும் வகையில், நம்மை மெய்ச சிலிர்க்கும் முறையில் செவிகள் குளிர ஓதிக்காட்டப்படும் இந்த மாபெரும் கிராஅத் அரங்கிற்கு அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என்றும், அல்லாஹ்வின் அருள்மழையில் நனைய வேண்டும் என்றும் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும் பரங்கிப்பேட்டை ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளி மற்றும் அல் மதரஸத்துல் மஹ்மூதிய்யா (ஹிஃப்ழு மதரஸா) அரபுக் கல்லூரி நிர்வாகிகள் அழைப்பு விடுக்கின்றனர்.

இந்த அழைப்பை தமிழறிந்த அனைத்து மக்களுக்கும் எடுத்துரைத்து அவர்களையும் இந்நிகழ்வுகளில் கலந்து கொள்ள செய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றது.

  ©Template Blogger Green by Dicas Blogger.

TOPO